Megathoodham Song Lyrical – Airaa Movie

Megathoodham Song Lyrics from “Airaa“.Megathoodham song is sung by Padmapriya Raghavan.

Movie Name: Airaa,

Artists: Nayanthara, Kalaiyarasan, Yogi Baby and Others,

Music Director: K. S. Sundaramurthy.

Megathoodham Song Lyrics

ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம்
ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம்
ஹ்ம்ம்…ம்ம்….பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்

கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமோ
கோடையின் நிலவு

தொலைவிலே வெளிச்சம்
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவுதான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்

மேகதூதம் பாட வேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன் காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்

ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம்
ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம்
ஹ்ம்ம்…ம்ம்….பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்
ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..

நானும் நீயும்
காலம் எழுதி
காற்றில் வீசிய நாடகம்
அந்த காற்றே மீண்டும் இணைத்து
அரங்கம் ஏற்றும் காவியம்

தேவ முல்லை
பூக்கும் கொள்ளை
கொண்டதே என் வீட்டின் எல்லை
என்னை நீ மறவாதிரு
புயல் காற்றிலும் பிரியாதிரு…….
ஹா….ஆஅ….ஆஅ….

மேகதூதம் பாட வேண்டும்
மேனி மீது சாரல் வேண்டும்
காளிதாசன் காண வேண்டும்
வானவில் வரும் வாழ்வில் மீண்டும்

தும்பை போலே
தூய அழகை
உன்னிடம்தான் காண்கிறேன்
என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்
நாளை எண்ணி ஏங்கினேன்

இந்த வார்த்தை
கேட்க்கும் போது
ஈரம் ஊறும் கண்ணின் மீது
பாவையின் இந்த ஈரம்தான்
கருமேகமாய் உருமாருதே

கானல் ஆகுமோ
காரிகை கனவு
தாகம் தீர்க்குமா
கோடையின் நிலவு

தொலைவிலே வெளிச்சம்
தனிமையில் உருகும் அனிச்சம்
கனவுதான் இதுவும்
கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
தினம் வருதே அச்சம்

ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம்ம்……..

Also, read about:

Add Comment