we are shared the Nesam Puthu Nesam Tamil Song Lyrics form the Embiraan Movie
Nesam Puthu Nesam Song Lyrics Tamil
நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது
காதல் வழி காதல் வழி
கால்கள் இனி செல்லும் அடி
எனது கண்ணுக்கு
உந்தன் கனவு தாவுது
இவன் இளமை மீது
இறகு போல நடந்து போனவள்
இன்று மனது ஓய்ந்த கடவுளாக
மடியில் சாய்ந்தனள்
இந்த உலகினை மறந்தவள்
உயிரில் விழுந்தவள்
நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது
சிறிய கோப்பை பெருங்கடல்
நிரப்பலாகுமா
நூறு கோடி நினைவுகள்
இதயம் தாங்குமா
மூன்று காலம் துறந்து நீ
உறங்கி கொள்ளம்மா
மரணம் அற்ற ஒரு மொழி
மௌனம் தானம்மா
உந்தன் இதழில்
உறைந்த கவிதை
தினம் படித்து பார்க்கிறேன்
சின்ன விழியில் புதைந்த விருப்பம்
அதை புரிந்து கொள்கிறேன்
இந்த கலக்கம்
நம்மை கடக்கும்
இரவும் பகலும் இனிக்கும்
நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது
நாளை உனது குறுநகை
மீண்டும் தோன்றுமே
நின்று போன குறும்புகள்
நிகழ தொடங்குமே
அருவி போல அவிழுவாய்
வாழ்வு நனையுமே
நிலவு நீயும் விலகிட்டாள்
வானம் உதிருமே
இந்த கருவி யுகத்தை கடந்து
ஒரு கருணை வளர்க்கலாம்
அடி உணர்வு நிலையில் இருந்து
புது காதல் வார்க்கலாம்
சிறு மயக்கம்
மெல்ல தெளியும்
கவலை முகில்கள் களையும்
நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது
காதல் வழி காதல் வழி
கால்கள் இனி செல்லும் அடி
எனது கண்ணுக்கு
உந்தன் கனவு தாவுது
இவன் இளமை மீது
இறகு போல நடந்து போனவள்
இன்று மனது ஓய்ந்த கடவுளாக
மடியில் சாய்ந்தனள்
இந்த உலகினை மறந்தவள்
உயிரில் விழுந்தவள்
Click here for the details of :